Thursday, July 10, 2014

வாடகை விவகாரங்களில் போலீஸ் தலையிடலாமா ?

                    தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

வாடகை விவகாரங்களில் போலீஸ் தலையிடலாமா ?

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!


வாடகை விஷயத்தில் போலீஸ்சார் தலையிட உரிமை இல்லை; சிவில் கோர்ட்டை அனுகும்படி அறிவுரை கூறவேண்டும். என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், சையத் என்பவர்,புகார் ஒன்றை அளித்தார்.கட்டடத்தில் வடகைக்கு இருக்கும் சுரேஸ் என்பவர் ,வாடகை பாக்கி வைத்துள்ளர் ; அதை வசூலீத்து தரவேண்டும் என புகாரில் கூறியிருந்தார்

இதை அடுத்து புகாரி அடிப்படையில் போலிஸார் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவு விடகோரி ,சுரேஸ் , உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கில் நமோ நாராயணன்,
நில உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில்,மனுதாரருக்கு, நோட்டிஸ் வழங்கப்பட்டது.
காவல் நிலையத்தில் ஆஜராகி, புகாரை பார்த்தப்போது. அதில் கிரிமினல் குற்றம் செய்ததாக ஏதும் இல்லை. போலீஸார் புகாரை அனுமதித்திருக்க கூடாது, என்றார்.

போலீஸ் தரப்பில் , கூடுதல் அரசு குற்றவியல் வக்கில் , எமலியாஸ் ; விசாரனை நடத்தப்பட்டு புகார் முடிக்கப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி பிறபித்த உத்தரவு !

நில உரிமையாளர்க்கும் , வாடகை தாரருக்கும் இடையேயான உறவில் போலிஸ்சார் விசாரனை நடத்த உரிமை இல்லை. உரிய சிவில் கோர்ட் அல்லது வாடகை கட்டுபாட்டு அதிகாரியை அனுகும்படி அறிவுறுத்த வேண்டும்.
போலீஸ் தரப்பில் புகாரை தாக்கல் செய்யவில்லை என்றாலும் , நோட்டிஸ் நகல் தாக்கல் செய்யப்பட்டது. விசாரனை ஏற்கனவே முடிந்து விட்டதாக கூறப்பட்டுள்ளதால், மனுதாரரை போலிஸ்சார் தொந்தரவு செய்யக் கூடாது.

இவ்வாறு நீதிபதி உத்தரவு விட்டார்

தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
அரசு சட்டக்கல்லூரி மாணவன்


1 comments: