Friday, August 22, 2014

கலப்பு திருமணம் செய்வோர் அரசின் நிதியுதவி பெறுவது எப்படி?

கலப்பு திருமணம் செய்வோர் அரசின் நிதியுதவி பெறுவது எப்படி? 

 

 தம், ஜாதி மாறி திருமணம் செய்துகொள்வோர் மற்றும் மறுமணம் செய்துகொள்ளும் விதவைப் பெண்களுக்கு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

மதம், ஜாதி மாறி கலப்புத் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறதா?
ஆம், கலப்புத் திருமண நிதியுதவி திட்டம் உள்ளது. திட்டம்-1, திட்டம்-2 என இரு வகைகளில் நிதியுதவி வழங்கப்படுகிறது. திட்டம் 1-ல் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதில் ரூ.15 ஆயிரம் காசோலையாகவும், மீதமுள்ள ரூ.10 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படுகிறது. மேலும், 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ல் ரூ.50 ஆயிரம், 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. அதில் ரூ.30 ஆயிரம் காசோலையாகவும், ரூ.20 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும். திட்டம் 2-ல் பயன்பெற பட்டம், பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
கலப்பு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்பெற நிபந்தனை என்ன