Thursday, May 22, 2014

மோட்டார் வாகன சட்டபடி நடத்துனரின் கடமை என்ன?

              

                           தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்



படித்துபார்ருங்கள் உங்களிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது

பணியில் இருக்கும் போது நடத்துனர் (MVR Sec 78) ......

(அ) புகை பிடிக்கக் கூடாது

(ஆ) பயணிகளிடம் உபசரிப்புடனும் ஒழுங்குடனும் நடந்து கொள்ள வேண்டும்

(இ) தூய சீறுடை அணிந்திருக்க வேண்டும்

(ஈ) வாகனத்தை சுத்தமாகவும், சுகாதாரமாககும் வைத்திருக்க வேண்டும்

(உ) அடுத்த வாகனத்தில் ஏறும் பயணிகளிடம் இடையூறு செய்யக் கூடாது. அதாவது எந்த வாகனத்தில் செல்ல வேண்டும் என்று முடிவு செய்வது பயணிகளின் உரிமை. அதில் தலையிடக் கூடாது.

பயணிகளிடம் நடத்துனரின் கடமை (MVR Sec 79).........

Tuesday, May 20, 2014

IPC section 125 ஆசியநாட்டிற்க்குகெதிராக போர் தொடுத்தல்....




                                 தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்




அரசாங்கத்துடன் உடன்படிக்கை கொண்டுள்ள ஆசியநாட்டிற்க்குகெதிராக போர் தொடுத்தல்....
WAGING WAR AGAINST ANY ASLATIC POWER IN ALLIANCE WITH THE GOVERNMENT ....

நபர் ஒருவர் இந்திய அரசாங்கத்துடன் கூட்டு அல்லது அமைதி உடண்படிக்கை கொண்டுள்ள ஆசிய நாட்டிற்க்கு எதிராக போர் தொடுக்க முயர்ச்சித்தால் அல்லது தூண்டுதல் ஆகிய செயல்களை செய்தல்.
IPC SECTION 125 படி 7 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்

                                                                                      அரசு சட்டகல்லூரி மாணவன் ...
                  dinamorusattam@gmail.com

முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                            http://dinamorusattam.blogspot.in
முக புத்தகத்தை like செய்த அனைவருக்கும் நன்றி
                தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்





Sunday, May 18, 2014

கணவர் அல்லது கணவரது உறவினார்களால் கொடுமை IPC SECTION 498.... பிரிவு 498


                     தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

கணவர் அல்லது கணவரது உறவினார்களால் கொடுமை
OF CRUELTY BY HUSBAND OR RELATIVIES OF HUSBAND ....
IPC SECTION 498.... பிரிவு 498

ஒரு பெண்ணின் கணவர் அல்லது கணவரது உறவினர்களால் அந்த பெண் கொடுமைக்கு ஆளகினால் அந்த நபர்க்கு மூன்று 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்..

வழக்கு::
P.B BIKSDHAPATHI VS STATE OF A.P
P.B பிக்ஸ்தா பதி எதிர் ஆந்திர அரசு குடித்துவிட்டு இரவில் தாமதமாக வரும் பழக்கம் மனைவியை தினமும் அடிக்கும் பழக்கத்துடன் வரதட்ச்சனை கேட்க்கும் பழக்கம் இருந்தால் அவைகள் கொடுமை அல்லது துன்புறுத்தல் எனப்படும்.

அரசு சட்டகல்லுரி மாணவன் 



முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                            http://dinamorusattam.blogspot.in

தற்காப்புரிமையை எப்பொழுது பயன்படுத்தலாம் ....


தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
                            
                           தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்


தற்காப்புரிமையை எப்பொழுது பயன்படுத்தலாம்
IPC SECTION 97 சொல்கிறது...


1. தற்காப்பிற்க்கான் உரிமையை செயல்படுத்துவதில் இந்த உரிமையை செயல்படுத்தும் நபர் அல்லது  வேறுநபர்க்கெதிராக குற்றம் ஒன்று செய்யப்பட்டிருக்க வேண்டும்.அல்லது குற்றம்  செய்ய முயற்ச்சி செய்யபட்டிருக்க வேண்டும்.

2.தற்காப்பிற்க்கான உரிமை ஒருநபர்க்கு கொடுங்காயம் பற்றிய நியாமான அட்ச்சம் இருந்தால் செயல்படுத்தலாம்.

3.தற்காப்புரிமையை செயல்படுத்துவோருக்கு அதிகாரிகளை தொடர்புகொள்வதற்க்கு  கால அவகாசம் இருந்திருக்க கூடாது.

4.தற்காப்புரிமை தனது உடல் மற்றும் சொத்து மற்றும் வேரொருவரின் உடல் மற்றும் சொத்தை பாதுகாப்பது வரை நீடிக்கிறது

           அரசு  சட்டகல்லூரி மாணவன்

முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                            http://dinamorusattam.blogspot.in

Saturday, May 17, 2014

மோட்டார் வாகன சட்டம் நாம் அறிந்திருக்க வேண்டியவை

தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக
1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine
2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine
3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine
4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine
5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine
6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine
மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine
7..குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court
8. மன நிலை ,உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine
9..போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine
10..அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine
11..அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine .
12..காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் section 190 (2) .Rs.50 fine
13..பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine
14..அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine
15..காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine
16..வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine
17..போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் section 201 .Rs.50 fine

திருமண பதிவுக்கும் 'தட்கல் நடைமுறை

                            திருமண பதிவுக்கும் 'தட்கல் நடைமுறை'..
                            24 மணி நேரத்தில் சான்றிதல் கிடைக்கும்.......

                                       தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

டில்லியில் நடக்கும் அனைத்து திருமணங்களும் திருமணம் நடந்த 60 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என சமிபத்தில் supreme court உத்தரவு  இட்டது .
               இதையடுத்து டில்லியில் திருமண பதிவு கட்டாயமக்கப்பட்டுள்ளது. விரைவாக திருமண சான்றிதல் பெற டில்லி அரசு " தட்கல் முறையை" அறிமுகபடுத்தியுள்ளது.  இதன்படி பாஸ்போர்ட் , ரயில் டிக்கட், போல் திருமணச்சான்றிதல்களையும் தட்கல் முறயில் பெறலாம். சமந்தப்பட்டவர்கள் 10 ஆயிரம் ரூபாயியும் சமந்தபட்ட ஆவணமும் அளித்தால் 24 மணிநேரத்தில் திருமண சான்றிதல் வழங்கப்படும்.
சாதாரன நடைமுறையில் திருமணச்சான்றிதல் பெற 500 ரூபாதான் செலவாகும்....

முகபுத்தக தளத்திற்க்கு செல்ல    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                            http://dinamorusattam.blogspot.in

Friday, May 16, 2014

மே 17 நடந்த வரலாற்று நிகழ்வுகள்

மே 17 வரலாற்று நிகழ்வுகள் .... 
முழுமை யாக படிக்கவும்..

                               தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

1498 - வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.

1521 - பக்கிங்ஹாமின் மூன்றாவது நிலை சீமானான (Duke) எட்வேர்ட் ஸ்டாஃபேர்ட் தூக்கிலிடப்பட்டான்.

1590 - டென்மார்க்கின் ஆன் ஸ்கொட்லாந்து அரசியாக முடி சூடினாள்.

1792 - நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.

1809 - பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டான்.

1814 - நோர்வே நாட்டின் அரசியல் நிர்ணயம் அமைக்கப்பட்டது.

1846 - அடொல்ஃப் சாக்ஸ் என்பவரால் சாக்சபோன் வடிவமைக்கப்பட்டது.

1865 - அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட்டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1915 - பிரித்தானியாவின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.

1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரைக் கைப்பற்றியது.

1969 - சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ் கோளின் வளிமண்டலத்துள் சென்று வீனசில் மோத முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.

1974 - அயர்லாந்தில் டப்ளினில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.

1983 - லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கான உடன்பாடு லெபனான், இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையில் எட்டப்பட்டது.

1998 - தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண நகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

2006 - தமிழ்த் தொலைக்காட்சி நடிகை ஷ்ரத்தா விஸ்வநாதன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

2009 - தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.

பிறப்புகள்

1749 - எட்வர்ட் ஜென்னர் - ஆங்கில மருத்துவ ஆராய்ச்சியாளர் (இ. 1823)

1888 - டைச் பிரிமென், ஆங்கிலேயத் துடுப்பாளர் (இ. 1965)

1920 - பி. சாந்தகுமாரி, நடிகை, பாடகி

1945 - பி. சி. சந்திரசேகர், இந்தியத் துடுப்பாளர்

1967 - முகமது நசீது, மாலைதீவின் 4வது அரசுத்தலைவர்

1974 - செந்தில் ராமமூர்த்தி, அமெரிக்க நடிகர்

இறப்புகள்

1961 - மைசூர் வாசுதேவாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (பி. 1865)

2006 - ஷ்ரத்தா விஸ்வநாதன், தமிழ்த் தொலைக்காட்சி நடிகை

2007 - நகுலன், தமிழ் எழுத்தாளர்

சிறப்பு நாள்

உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்
நோர்வே - அரசியல் நிர்ணய நாள்


முகபுத்தக தளத்திற்க்கு செல்ல    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                            http://dinamorusattam.blogspot.in

Wednesday, May 14, 2014

மே 15 நடந்த வரலாற்று நிகழ்வுகள்



                       மே 15 நடந்த வரலாற்று நிகழ்வுகள் . MUST SHARE 

                                        தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
                                                        dinam oru sattam 

1525 - ஜெர்மனியின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரை அடுத்து விவசாயிகளின் போர் முடிவுக்கு வந்தது.

1618 - ஜொஹான்னெஸ் கெப்லர் முன்னர் மார்ச் 8இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார்.

1718 - உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.

1756 - இங்கிலாந்து பிரான்சின் மீது போரை அறிவித்ததில் ஏழாண்டுப் போர் ஆரம்பமாயிற்று.

1792 - பிரான்ஸ் சார்டீனியப் பேரரசு மீது போரை அறிவித்தது.

1796 - நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலான் நகரைக் கைப்பற்றினர்.

1851 - நான்காவது ராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.

Monday, May 12, 2014

ரொனால்டு ராஸ் பிறந்த தினம் . dinam oru sattam


                                 
                                  தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
                                                        dinam oru sattam

ரொனால்டு ராஸ் பிறந்த தினம் (HAPPY BIRTHDAY )

சர் ரொனால்டு ராஸ் (Ronald Ross) மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்ற பிரித்தானிய மருத்துவர் ஆவார். மலேரியாவை உண்டாக்கும் பிளோஸ்மோடியத் தொற்றுயிரியை அனாஃபிலஸ் கொசுவில் கண்டறிந்தமைக்காக இப்பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

ரொனால்டு இந்தியாவில் மே மாதம் 13 ஆம் நாள் 1857 ல் அல்மோராவில் பிறந்தார். இவரது தந்தை ஆங்கிலேய இராணுவ அதிகாரியாய் இருந்தார். எட்டு வயதில் கல்விகற்க இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட ரொனால்டு 1875 ஆம் ஆண்டு அங்கேயே மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். 1880 இல்படிப்பை முடித்து இந்திய மருத்துவ சேவையில் இணைந்தார். முதன்முதலில் மதராசப்பட்டினத்தில் அவருக்கு பணி நியமனம் ஆனது. 1892 ஆம் ஆண்டில் மலேரியா குறித்த தனது ஆய்வைத் தொடங்கினார்.

1897 ஆம் ஆண்டு ஊட்டியில் பணியமர்த்தப்பட்ட ராஸ் மலேரியாவால் தாக்கப்பட்டார். செக்கந்திராபாத்துக்கு மாற்றப்பட்ட பின் ஓஸ்மேனியா பல்கலைகழகத்தில் மலேரிய ஒட்டுண்ணி அனாஃபிலஸ் வகை கொசுவினுள் இருப்பதைக் கண்டறிந்தார். இந்த ஒட்டுண்ணிகள் கொசுக்களின் உமிழ்நீரில் உருப்பதைக் கண்டார்.இதிலிருந்து அவை எவ்வாறு மலேரியா நோயினைப் பரப்புகிறது எனத்தெளிந்து கூறினார்.

1902 ஆம் ஆண்டு மலேரியா குறித்த கண்டுபிடிப்புகளுக்காக இவர் நோபெல் பரிசு பெற்றார்.

1932 ,செப்டம்பர் மாதம் 16 ஆம் நாள் இலண்டனில் இயற்கை எய்தினார்.

அரசு சட்டகல்லுரி மாணவன்                  


முகபுத்தக தளத்திற்க்கு செல்ல    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                            http://dinamorusattam.blogspot.in

Sunday, May 11, 2014

மே 12 உலக செவிலியர் தினம்



                                                  தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்                  

மே 12 உலக செவிலியர் தினம்




முகபுத்தக தளத்தை LIKE செய்ய     https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=hl


                                                http://dinamorusattam.blogspot.in

குழந்தை தத்தெடுப்பது பற்றி சட்டம் என்ன சொல்கிறது ?

 
தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு
                                 
                                     தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு 
                                       http://dinamorusattam.blogspot.in

       குழந்தை தத்தெடுப்பது பற்றி சட்டம் என்ன சொல்கிறது


குழந்தையில்லாத யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தத்து எடுத்துவிட முடியாது
இந்தியாவில் ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கசப்பான உண்மை. பெரும்பாலும் தவறான உறவு முறையின் மூலம் பிறந்து, ஆதரவற்று விடப்படுவது, ஏழ்மை நிலையினால் வளர்க்க இயலாத சூழல், சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் குடும்பத்தைப் பிரிய நேரிடுவது, வீட்டை விட்டு ஓடி வருவது அல்லது திருவிழா, கூட்டங்களில் தவற விடப்படும் குழந்தைகள் என்று அந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது.

மீண்டும் பெற்றோரைச் சேர இயலாத பெரும்பாலான குழந்தைகள் அரசாங்கம் நடத்தும் ஜுவனைல் ஹோம்ஸ் மற்றும் தனியார் நடத்தும் காப்பகங்கள் போன்றவற்றில் தஞ்சம் அடைகிறார்கள். அது முடியாத குழந்தைகள் பலர் பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படுவதும், கடுமையான கொத்தடிமை வேலைகளான கண்ணாடி வளையல் தொழிற்சாலை, பட்டாசுத் தொழிற்சாலை, தோல் பதனிடும் தொழிற்கூடம் போன்றவற்றில் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுவதும் நடக்கிறது. பெண் குழந்தைகள் பெரும்பாலும் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு. குழந்தைப் பாலியல் தொழிலாளிகளாக்கப்படும் அவலமும், வீட்டு வேலைக்கு அனுப்பப்படுவதும் நடக்கிறது.

பெற்றோரின் அன்பையும் அரவணைப்பையும் உணராமல், குழந்தைப் பருவமே சாபமான அந்தக் குழந்தைகளுக்கு ஆதரவளிக்க தொண்டுள்ளம் கொண்டவர்களுக்கு சட்டம் காட்டும் வழிதான் தத்து. நம்முடைய நாட்டில் தத்து என்பதற்கு தனிப்பட்ட ஒரு சட்டம் இதுவரை இயற்றப்படவில்லை. மேலும், நம் நாட்டில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் தத்து எடுக்க அவர்களின் மதக் கோட்பாடுகள் ஒரே மாதிரி அங்கீகரிப்பதில்லை. அதோடு, இந்திய அரசியல் சாசனம் தன்னுடைய 44வது ஷரத்துப்படி ‘காமன் சிவில் கோடு’ அமைக்க வலியுறுத்தியும், சில உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் மூலம் வலியுறுத்தப்பட்டிருப்பினும் இன்றுவரை அது கானல் நீராகவே இருக்கிறது.

இந்துக்கள் தத்து எடுப்பதையும் கொடுப்பதையும் அவர்கள் மதம் காலங்காலமாக அனுமதித்திருப்பதற்கான சான்றுகள் ஏராளம். மேலும், 1956ம் ஆண்டு இயற்றப்பட்ட ஹிந்து அடாப்ஷன்ஸ் மற்றும் மெயின்டனன்ஸ் ஆக்ட் 1956 இயற்றப்பட்டுள்ளது. இந்து மதத்தைப் பொறுத்த வரை தத்து கொடுப்பதையும் எடுப்பதையும் அங்கீகரிக்க முக்கிய காரணம், ஒரு இந்துவுக்கு மரணம் சம்பவிக்கும் போது, ஈமக் காரியங்கள் செய்வதற்கு ஆண் வாரிசு அவசியமாகக் கருதப்பட்டது. அதனால் குழந்தைப் பேறு இல்லாத இந்துக்களும், ஆண் வாரிசு இல்லாத இந்துக்களும் ஒரு ஆண் குழந்தையை தத்து எடுப்பது என்பது நடைமுறையில் இந்துக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விஷயம்.

மேற்சொன்ன சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னர் ஒரு இந்து ஆண் குழந்தையை மட்டுமே தத்து எடுப்பது அங்கீகரிக்கப்பட்டது. மேலும் தத்து எடுப்பது, கொடுப்பது ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட ஒரு உரிமையாக இருந்தது. இந்த சட்டம் இயற்றப்பட்ட பிறகு இந்துக்களின் தத்து முறையில் பெரிய மாற்றம் உண்டானது. இந்துக்கள் என்ற சொல், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின் இனத்தவர் என அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாக சட்டம் சொல்கிறது.

யார் தத்தெடுக்கலாம்?

குடும்ப வன்முறை என்றால் என்ன?


தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
                                         

                                                   தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
                                                     http://dinamorusattam.blogspot.in

குடும்ப வன்முறை என்றால் என்ன?

குடும்ப வன்முறை: 

உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும்தான் குடும்ப வன்முறை. கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப்பது, தள்ளுவது, கையில் கிடைத்த பொருளை வீசி எறிவது ஆயுதம் கொண்டோ அல்லது அது இல்லாமையோ தாக்குவது போன்றவை உடல் ரீதியான குடும்ப வன்முறை. இது கணவன் - மனைவி இடையில் மட்டுமே நடக்க வேண்டுமென்பதில்லை. மற்ற உறவினர்களுக்கு இடையிலும் நடக்கலாம். சந்தேகப்படுவது, ஆபாசமாக திட்டுவது, அவதூறு செய்வது, தனிமைப்படுத்துவது போன்றவை மன ரீதியான வன்முறைகள். தேவையில்லாமல் தொட்டுப் பேசுவது, முத்தமிடுவது, கட்டியணைப்பதில் தொடங்கி வல்லுறவு வரை செல்வது பாலியல் ரீதியான வன்முறைகள்.

இந்தச் சட்டம் எப்போது அமலுக்கு வந்தது? 


Saturday, May 10, 2014

மதுக் கடைகளை மூடுவதற்குச் சட்டத்தில் இடம் இருக்கிறதா?

      மதுக் கடைகளை மூடுவதற்குச் சட்டத்தில் இடம் இருக்கிறதா?

தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்            
                                                 
                                         தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
                                                     http://dinamorusattam.blogspot.in

சட்டம் சொல்வது

அரசியலமைப்புச் சட்டத்தில் 47-வது ஷரத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவது அரசின் நெறிமுறைக் கொள்கையாகக் கூறப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அது இன்றுவரை சாத்தியம் ஆகவில்லை. 1937-ல் கொண்டுவரப்பட்ட மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் இயற்றப்பட்ட விதிகளின் அடிப்படையிலேயே தமிழகத்தில் அரசாங்கத்தால் மதுக் கடைகள் நடத்தப்படுகின்றன. இதற்காக அரசு நடத்தும் நிறுவனம்தான் தமிழ்நாடு வாணிபக் கழகம் (டாஸ்மாக்). தமிழ்நாட்டில் இன்றைக்கு உள்ள 7,434 சில்லறை விற்பனை மதுக் கடைகளும் இந்நிறுவனத்துடையதுதான். கடந்த ஆண்டு மட்டும் அரசுக்கு கலால் வரி மூலம் வருமானம் ரூ. 23,000 கோடிகள் என்கிறார்கள். எனில், எத்தனை போத்தல்களைக் குடிமகன்கள் காலிசெய்திருப்பார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.

மருத்துவம் தவிர மற்றவற்றுக்குத் தடை

1937-ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி காலத்தில்தான் முதல் முறையாக மதுவிலக்குச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் மதுக் கடைகள் மூடப்பட்டன. 1950-ல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 47-வது பிரிவில், மருத்துவக் காரணங்களைத் தவிர, வேறு எக்காரணத்துக்கும் போதையூட்டும் பானங்கள் பருகுவதைத் தடைசெய்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள `டாஸ்மாக்' மதுக் கடைகள் 2003 தமிழ்நாடு சில்லறை (கடை மற்றும் மதுக்கூடம்) விற்பனை விதிகளின்படிதான் இயங்க வேண்டும். 1937 மதுவிலக்குச் சட்டத்தின் கீழ்தான் இவ்விதிகளும் இயற்றப்பட்டுள்ளன என்பது கொடுமை. மதுவிலக்கு அரசாங்கத்தின் நெறியாளும் கொள்கை என்பதனால், மதுக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது போத்தல்களில் `மது - நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்று லேபிள்களை ஒட்டும்படி அவ்விதிகளில் கூறப்பட்டுள்ளது.

விற்கக் கூடாது, ஆனால் குடிக்கலாம்

2003 விதிகளில் விதி எண் 15-ன் கீழ், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த வயதினர் மது அருந்துவதைச் சட்டம் தடை செய்யவில்லை. ஆனால், நடைமுறையில் இக்கடைகள் தங்களது தாராள குணத்தின் மூலம் பள்ளி மாணவர்கள்கூட மதுபோதைக்கு ஆளாகும் வகையில் விற்கின்றன.

காவல் துறையின் புதிய பொறுப்பு

மதுக் கடைகளிலும் அதனுடன் இணைக்கப்பட்ட மதுக் கூடங்களிலும் மூக்குமுட்டக் குடித்துவிட்டுக் குடிமகன்கள் போடும் கும்மாளங்களுக்கு அளவில்லை. குடித்துவிட்ட போத்தல்களையும் பிளாஸ்டிக் கோப்பைகளையும் மிஞ்சிப்போன பதார்த்தங்களையும் வீதியிலே வீசிவிட்டுச் செல்வதும், மிதமிஞ்சிய போதையில் சாலையிலேயே வாந்தி எடுத்துச் சரிவதும் அடிக்கடி நடக்கும் தகராறுகளும்... இவற்றைப் பற்றி மக்கள் என்ன புகார் கூறினாலும், காவல் துறை கண்டுகொள்வதில்லை. ஏன்? அந்தக் கடைகளை வருமானம் குறையாமல் பார்த்துக்கொள்ளும் புதிய பொறுப்பு காவல் துறைக்குக் கொடுக்கப்பட்டிருப்பதே இதன் காரணம்.

எப்படிச் சாத்தியமாகிறது?


இந்திய தண்டனைச் சட்டம்



தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
                               
                              தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

 இந்திய தண்டனைச் சட்டம் 1860, பிரிவு-312:

ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமலேயே  அவள் கர்ப்பத்துக்குக் காரணமாக இருக்கும் ஏமாற்றுப் பேர் வழிகளுக்கு, இந்தச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். அதிகபட்சமாக 7 வருடம் வரை அது நீட்டிக்கப்படலாம்.

   
* இந்திய தண்டனைச்சட்டம் 1860, பிரிவு-376(பி)

அரசு ஊழியர் ஒருவரின் கீழ் கவனிக்கச் சொல்லி விடப்படும் பெண்னை அவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினால், அபராதத்துடன் கூடிய 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத்தர வழி வகை செய்கிறது இந்த சட்டம்.    




முகபுத்தக தளத்திற்க்கு செல்ல    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=hl


                                                http://dinamorusattam.blogspot.in

Friday, May 9, 2014

+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி


தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
                               
                                    தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

+2 வில் அதிக மதிப்பெண் பெற்ற இந்த மாணவிக்கு
தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்/ வலைதளம் சார்பாக வாழ்த்துக்கள்
மாணவியின் பெயர் சுஷாந்தி




முகபுத்தக தளத்திற்க்கு செல்ல    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=hl


                                                http://dinamorusattam.blogspot.in

Thursday, May 8, 2014

கோபால கிருஷ்ண கோகலே பிறந்த தினம்

                                       
                                            தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்


தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்                               
                     கோபால கிருஷ்ண கோகலே பிறந்த தினம் மே 9

கோபால கிருஷ்ண கோகலே , CIE (மராட்டிगोपाळ कृष्ण गोखले) (மே 9, 1866 - பிப்ரவரி 19, 1915) இந்தியாவில்ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்புபின் உருவாக்குனரும் ஆவார். அந்த அமைப்பின் மூலம் மட்டுமல்லாது காங்கிரஸ் மற்றும் இதர அரசியலமைப்புகளில் பணிபுரிந்ததன் மூலம், கோகலே ஆங்கிலேய அரசிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் அல்லது முக்கியமாக அதை மட்டுமே செய்யாமல் அவர் சமூக மாற்றத்தையும் முன்னெடுத்தார். கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்: வன்முறையைத் தவிர்த்தல் மற்றும் இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல்.


பின்னணி மற்றும் கல்வி

கோபால கிருஷ்ண கோகலே, 1866 ஆம் ஆண்டு மே 9 அன்று மஹாராஷ்டிராவின் கோதாலுக்கில் பிறந்தார், அப்போது இந்த மாநிலம் இந்திய மேற்கு கடற்கரையோரம் இருந்த பாம்பே பிரெசிடென்சியின் ஒரு அங்கமாக இருந்தது. அவர்கள் சித்பாவன் பிராமணர்களாக இருந்தபோதிலும் கோகலேவின் குடும்பம் ஒப்பீட்டளவில் ஏழ்மையில் இருந்தது. இவ்வாறு இருந்தபோதிலும் அவர்கள் கோகலேவுக்கு ஆங்கில கல்வி கிடைப்பதை உறுதிசெய்தனர், இதன் மூலம் ஆங்கிலேய அரசில் ஒரு கிளார்க்காகவோ சிறு அதிகாரியாகவோ வேலை கிடைக்கும் நிலையில் கோகலே இருப்பார் என நம்பினர். பல்கலைக்கழக கல்வியைப் பெறும் முதல் தலைமுறை இந்தியர்களில் ஒருவராக இருந்த கோகலே 1884 ஆம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தன் பட்டப்படிப்பை முடித்தார். 

Wednesday, May 7, 2014

ஆவணங்கள் தொலைந்தால் எவ்வாறு திரும்ப வாங்கலாம் ? யாரிடம் செல்லலாம் ?

ஆவணங்கள் தொலைந்தால் எவ்வாறு திரும்ப வாங்கலாம் ? யாரிடம் செல்லலாம் ?


                                 தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்


தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

(ரேஷன் கார்டு ,மதிப்பெண் பட்டியல்,டிரைவிங் லைசென்ஸ் மற்றும் சில ஆவணங்கள் தொலைந்தால் என்ன செய்வது )

1.இன்ஷூரன்ஸ் பாலிசி!

யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தரவேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி

பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக

ரூ.75 கட்ட வேண்டும்.

இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல்

ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:
நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால்

அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய்

பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்;

அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு,ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

..............................................................................................
2.மதிப்பெண் பட்டியல் யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத்தேர்வு ( 2)பட்டியல் ரூ.505.

கால வரையறை:

விண்ணப்பம்செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம்

வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த

விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட

கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த

விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித்

தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர்

கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

..............................................................................................

3.ரேஷன் கார்டு யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர். என்னென்ன ஆவணங்கள் தரவேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள

அட்டை எவ்வளவு கட்டணம்?புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட

வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள்

கிடைத்துவிடும். நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன

விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும்

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப்

பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

.............................................................................
4.டிரைவிங் லைசென்ஸ் யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண். எவ்வளவு கட்டணம்?கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்). கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக

ஒரு வாரம்.நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம்

சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

...........................................................................................

5.பான் கார்டு யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட் ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.எவ்வளவு கட்டணம்?அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.



Tuesday, May 6, 2014

பட்டா மாற்றம் செய்வது எப்படி?

                   
                                  தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

பட்டா மாற்றம் செய்வது எப்படி?



நமக்கு உள்ள சொத்து, வாரிசுரிமை, பாகப் பிரிவினை, உயில் ஆவணம் மற்றும் செட்டில்மெண்ட் பத்திரங்களின்படியோ அல்லது நாம் வெளியே வாங்கி இருந்தாலோ அதற்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும். அதை எப்படிச் செய்வது?

சொத்து எந்த தாலுகா அலுவலக எல்லைக்கு உட்பட்டதோ, அந்தப் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பதிவு மாற்றம் தொடர்பாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக 3 பக்கத்தில் விண்ணப்பப்படிவம் உள்ளது. இணையத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்தும் இதற்கு விண்ணப்பிக்கலாம். சர்வே எண் முழுவதும் வாங்கியிருந்து, அதற்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டுமென்றால், 15 நாள்களுக்குள் செய்து விடலாம். ஒரு சர்வே எண்ணில் ஒரு பகுதி, பட்டா மாற்றமாக (உட்பிரிவு) இருந்தால், 30 நாள்களிலும் பட்டா மாற்றம் செய்து கொடுக்கப்படும். இதற்கு கட்டணம் ரூ.80.

விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் பெயர், தகப்பனார்/கணவர் பெயர், இருப்பிட முகவரி மற்றும் பதிவு மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரம் ( மாவட்டம், வட்டம், கிராமத்தின் பெயர், பகுதி எண், நகர அளவை எண் / மறுநில அளவை எண், உள்ளூர் பகுதி / நகரத்தின் பெயர், தெருவின் பெயர், மனைபிரிவு எண் ஆகிய தகவல்கள் கொடுக்கப்படவேண்டும்).

மனை அங்கீகரிக்கப்பட்டதா / அங்கீகாரம் இல்லாததா என்பதை அறிவதற்காக மனைப்பிரிவு வரைபடமும் இணைக்கப்படவேண்டும்.

மனுதாரருக்கு சொத்து எவ்வாறு கிடைத்தது என்ற விவரமும் கூறப்பட வேண்டும் (தொடக்கத்தில் கூறப்பட்ட முறைகளில் ஒன்று)

சொத்து மனுதாரரின் கட்டுப்பாட்டில் உள்ளதா? எவ்விதம் கட்டுப்பாட்டில் உள்ளது? என்ற தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.(அதாவது, மாநகராட்சி சொத்துவரி செலுத்திய ரசீது / மின் கட்டண அட்டை / குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை / குடும்ப அட்டை / வாக்காளர் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று)

பதிவு மாற்றம் கோரும் இடம் சொத்தில் ஒரு பகுதியா அல்லது முழுமையானதா என்ற விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.

பதிவு மாற்றம் கோரும் இடம் சொத்தின் ஒரு பகுதியாக இருந்தால், உட்பிரிவுக்கு கட்டணம் செலுத்திய (சலான் எண் / நாள் / தொகை / செலுத்திய வங்கி / கருவூலத்தின் பெயர்) விவரங்களை விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்.

இந்த தகவல்களை தெரிவித்து, குறிப்பிட்ட காலத்துக்குள் பட்டா கொடுக்கப்படவில்லை என்றால், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யலாம்.


     http://dinamorusattam.blogspot.in

                                  
                                    முகபுத்தக தளத்திற்க்கு செல்ல    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=hl

பண்டித் மோதிலால் நேரு பிறந்த தினம்




                                     தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்


பண்டித் மோதிலால் நேரு பிறந்த தினம் (மே.6, 1836)

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞருமான மோதிலால் நேரு 1861-ம் ஆண்டு மே 6-ம்தேதி பிறந்தவர். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1919- 1920 மற்றும் 1928-1929 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.

இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு- காந்தி குடும்பத்தின் இவர்தான் முன்னோடி. இவர் முன்னாள் இந்திய பிரதமர் ஜவகர்லால் நேருவின் தந்தையும் ஆவார். தன்னுடைய 70-வது வயதில் 1931-ம் ஆண்டும் பிப்ரவரி மாதம் 5 தேதியில் காலமானார்









முகபுத்தக தளத்திற்க்கு செல்ல    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=hl


                                                                                                         


தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்