Monday, May 12, 2014

ரொனால்டு ராஸ் பிறந்த தினம் . dinam oru sattam


                                 
                                  தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
                                                        dinam oru sattam

ரொனால்டு ராஸ் பிறந்த தினம் (HAPPY BIRTHDAY )

சர் ரொனால்டு ராஸ் (Ronald Ross) மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்ற பிரித்தானிய மருத்துவர் ஆவார். மலேரியாவை உண்டாக்கும் பிளோஸ்மோடியத் தொற்றுயிரியை அனாஃபிலஸ் கொசுவில் கண்டறிந்தமைக்காக இப்பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

ரொனால்டு இந்தியாவில் மே மாதம் 13 ஆம் நாள் 1857 ல் அல்மோராவில் பிறந்தார். இவரது தந்தை ஆங்கிலேய இராணுவ அதிகாரியாய் இருந்தார். எட்டு வயதில் கல்விகற்க இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட ரொனால்டு 1875 ஆம் ஆண்டு அங்கேயே மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். 1880 இல்படிப்பை முடித்து இந்திய மருத்துவ சேவையில் இணைந்தார். முதன்முதலில் மதராசப்பட்டினத்தில் அவருக்கு பணி நியமனம் ஆனது. 1892 ஆம் ஆண்டில் மலேரியா குறித்த தனது ஆய்வைத் தொடங்கினார்.

1897 ஆம் ஆண்டு ஊட்டியில் பணியமர்த்தப்பட்ட ராஸ் மலேரியாவால் தாக்கப்பட்டார். செக்கந்திராபாத்துக்கு மாற்றப்பட்ட பின் ஓஸ்மேனியா பல்கலைகழகத்தில் மலேரிய ஒட்டுண்ணி அனாஃபிலஸ் வகை கொசுவினுள் இருப்பதைக் கண்டறிந்தார். இந்த ஒட்டுண்ணிகள் கொசுக்களின் உமிழ்நீரில் உருப்பதைக் கண்டார்.இதிலிருந்து அவை எவ்வாறு மலேரியா நோயினைப் பரப்புகிறது எனத்தெளிந்து கூறினார்.

1902 ஆம் ஆண்டு மலேரியா குறித்த கண்டுபிடிப்புகளுக்காக இவர் நோபெல் பரிசு பெற்றார்.

1932 ,செப்டம்பர் மாதம் 16 ஆம் நாள் இலண்டனில் இயற்கை எய்தினார்.

அரசு சட்டகல்லுரி மாணவன்                  


முகபுத்தக தளத்திற்க்கு செல்ல    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                            http://dinamorusattam.blogspot.in

0 comments:

Post a Comment