Saturday, November 29, 2014

சட்ட படிப்பு சேர வேண்டும் என்று ஆசைபடுபவர்களுக்கு

சட்ட படிப்பு சேர வேண்டும் என்று ஆசைபடுபவர்களுக்கு : ========================================= இந்திய மாணவர்களுக்கான அருமையான துறை சட்டத்துறை!
=========================================================உலகளாவிய வணிகத்திற்கு இந்திய சந்தை திறந்துவிடப்பட்ட பிறகு, வணிக நிறுவனங்களில் சட்ட நிபுணர்களுக்கான வாய்ப்புகள் ஏராளமாக பெருகியுள்ளன. அதனுடன் பாரம்பரிய சட்டப் பணி வாய்ப்புகளும் உள்ளன. ஒரு மாணவர், தனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டால், கிளாட் தேர்வில் தேர்ச்சி பெற்று, பசுமையான மற்றும் லட்சியமுள்ள பணி வாய்ப்புகளை நோக்கி செல்லலாம்.
அந்தகால இந்திய விடுதலை இயக்கங்களில் பிரபலமாக இருந்த பலர் மற்றும் இன்றைய இந்திய அரசியலில் பிரபலமாக இருக்கும் பல நபர்களும், அடிப்படையில் சட்டப் பட்டதாரிகளே. அந்தளவு, சட்டப் படிப்பானது சமூகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
இத்துறையில் நுழைதல்
======================== பொதுவாக, LLB என்று அறியப்படும் இளநிலை சட்டப் படிப்பை முடித்தவுடன், ஒருவர் சட்டத்துறை புரபஷனல் தகுதியை அடைகிறார். நீங்கள் சட்டம் படிப்பதற்கு தேர்வு செய்யும் வகையில் மூன்று வகையான கல்வி நிறுவனங்கள் உள்ளன.
* அரசு பல்கலைக்கழக துறைகள் அல்லது கல்லூரிகள்
* தேசிய சட்டப் பள்ளிகள்
* தனியார் பல்கலைக்கழகங்கள்.
சட்டப் படிப்பு 3 வருட LLB படிப்பாகவோ அல்லது 5 வருட ஒருங்கிணைந்த படிப்பாகவோ இருக்கலாம். இவை இரண்டுமே இளநிலைப் படிப்புகள். 3 வருட இளநிலை சட்டப் படிப்பு என்பது ஏற்கனவே பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கானது. வெறும் பள்ளிப் படிப்பை மட்டும் முடித்தவர்கள், 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பை மேற்கொள்ளலாம்.
இந்த 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பின்போது, சில குறிப்பிட்ட(specified) படிப்புகளை முடித்தப் பின்னர், 3 ஆண்டுகளின் முடிவில், ஒருவர் பி.ஏ., அல்லது பிஎஸ்.சி., பட்டம் பெறுவார். அதேசமயம், மொத்தமாக 5 ஆண்டுகளையும் நிறைவுசெய்த பிறகுதான், LLB பட்டம் கிடைக்கும்.
இந்தியாவில் சட்டப் பள்ளிகள்
நாடு முழுவதும் குறைந்தபட்சம் 900 சட்டக் கல்லூரிகள் இருக்கின்றன. பெங்களூரில், National Law School of India University(NLSIU) அமைக்கப்பட்ட பிறகு, இந்தியளவிலான சட்டப் படிப்பில், பெரியளவிலான ஒரு நல்ல தாக்கம் ஏற்பட்டது. தற்போது, அதைப்போலவே நாடு முழுவதும் 15 சட்டக் கல்வி நிறுவனங்கள் உள்ளன.
சேர்க்கைப் பெறுதல்
========================== தேசிய சட்டப் பள்ளிகளில் சேர்வதற்கு, CLAT தேர்வில் தேர்ச்சி பெறுவது ஒரு முக்கியமான பெரிய தகுதி. இதர பல சட்டக் கல்லூரிகள், LSAT - India மூலமாக மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. இதுதவிர, டெல்லியிலுள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான அகில இந்திய சட்ட நுழைவுத் தேர்வு(AILET) மற்றும் சிம்பயோசிஸ் நுழைவுத் தேர்வு போன்றவையும் நடைமுறையில் உள்ளன.
இவைதவிர, மாநில அளவில், சட்டப் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் பலவிதமான நுழைவுத் தேர்வுகள் பல மாநிலங்களில் வழக்கத்தில் உள்ளன.
கற்றல் செயல்பாடு
==================== தேசிய சட்டப் பள்ளிகள், பொதுவாக, செமஸ்டர் முறையைப் பின்பற்றுகின்றன. ஆனால், பெங்களூரின் NLSIU, தனித்துவமான முறையில் Trimester அமைப்பை பின்பற்றுகிறது.
செமஸ்டர் சிஸ்டத்தின்படி, ஒரு மாணவர் 10 செமஸ்டர்களை கடக்க வேண்டும். இன்டர்ன்ஷிப் மற்றும் வழக்காடு பயிற்சிகள் போன்றவை ஒருவர் தனது சட்டப் படிப்பில், தியரி மற்றும் பிராக்டிகல் திறன்களை பெறுவதற்கு பெரிதும் துணைபுரியும்.
சட்டம் ஒரு தொழில்துறை
இந்தியாவிலுள்ள வழக்கறிஞர்கள், நீதிமன்றங்களில் பயிற்சி செய்ய வேண்டுமெனில், அகில இந்திய பார் தேர்வை எழுதி தேர்ச்சிப் பெற வேண்டும். முன்பெல்லாம், சிவில் மற்றும் கிரிமினல் என்ற அளவில் சட்டப் பணிகள் சுருங்கியிருந்தன. ஆனால், தற்போது முன்னணி சட்டப் பள்ளிகளில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.
தற்போதைய பொருளாதார தாராளமய சூழலில், இணைப்பு மற்றும் சேர்ப்பு, வங்கியியல் மற்றும் நிதியியல், உள்கட்டமைப்பு ஒப்பந்தங்கள், தனியார் பங்கு வர்த்தகம், WTO சட்டம், அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறான அம்சங்களில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.
சிறப்பான எதிர்காலம்
சட்டப் பட்டதாரிகளுக்கென்று இந்தியாவில் இருக்கும் பணி வாய்ப்புகள் அளப்பரியன. சட்டத் துறை பணியானது, அதிக வருமானம் தரக்கூடிய மற்றும் திருப்தியான பணி என்று பல மாணவர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். அதேசமயம், சமூகத்திற்கு பயனுள்ள வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்பும் மாணவர்களும், கணிசமான அளவில் சட்டப் படிப்பை தேர்வு செய்கின்றனர்.
எனவே, நமது தூக்கத்தை கலைத்து, நமக்கு சட்டத் துறையில் ஆர்வம் இருப்பின், அதை நோக்கி நமது பயணத்தை தொடங்க வேண்டிய தருணம் இது.

Saturday, November 15, 2014

தற்கொலை

 
இந்திய தண்டனைச் சட்டம்,1860:                                 dinamorusattam@gmail.com
பிரிவு:305. குழந்தையின் அல்லது பைத்தியம் பிடித்தவரின்
தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல்:
“18 வயதுக்குட்பட்ட அல்லது பைத்தியம் பிடித்த
அல்லது, வெறி பிடித்த அல்லது, அறிவிலி
அல்லது குடி போதையிலிருக்கும் எவரேனும்
தற்கொலை செய்து
கொண்டால், அத்தகைய
தற்கொலை
செய்துகொள்ளப்படுவதற்கு
உடந்தையாயிருக்கிற எவரொருவரும், மரண
தண்டனையோ அல்லது ஆயுள்
தண்டணையோ அல்லது பத்து ஆண்டுகள்வரை
நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்குச்
சிறைதண்டனையோ விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்
மற்றும் அவரை அபராததிற்கு உள்ளாக்கவும்
செய்யலாம்”.
பிரிவு:306.
தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல்:
“ஒருவர் தற்கொலை
செய்துகொண்டால், அத்தகைய
தற்கொலை செய்து
கொள்ளப்படுவதற்க்கு உடந்தையாயிருக்கிற
எவரொருவரும் பத்து ஆண்டுகள்
வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்குச்
சிறைதண்டனை விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்
மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும்
செய்யலாம்”.
பிரிவு:309.
தற்கொலை செய்துகொள்ள
முயற்சி:
“தற்கொலை செய்துகொள்ள
முயல்கிற மற்றும் அத்தகைய குற்றம் செய்ய
ஏதாவது ஒரு செயலைச் செய்கிற
எவரொருவரும், ஓர் ஆண்டு வரை நீடிக்ககூடிய
ஒரு கால அளவிற்க்கு மெய்காவல்
தண்டனையோ அல்லது அபராதமோ விதித்து
தண்டிக்கப்படுதல் வேண்டும்”.
தற்கொலை தொடர்பான
உயர் நீதிமன்ற தீர்ப்புகள்:...