Tuesday, June 10, 2014

IPC section 304


                            தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

அசட்டையான மற்றும் கவனமின்மை செய்யலினால் ஏற்படும் மரணம்-கவனக் குறைவினால் இறத்தல்(  IPC  sec 304 A )

குற்றம் எண்ணம் அல்லது அறிந்திருத்தல் அல்லாமல் குற்றம் இழைத்தவரின் கண் மூடித்தனமான கவனக் குறைவான செயலினால் ஒரு நபர்க்கு மரணம் ஏற்பட்டால் இது கடுமையாக தண்டிக்கபடுவது அல்ல.ஏனெனில் இங்கு குற்றம் எண்ணம் இல்லை..

இருப்பினும் இச்செயல் மரணம் விளைவிக்கும் குற்றம்மாக இருக்க கூடாது.

தண்டனை.......?



இச்செயலினால் இரண்டு ஆண்டுகள் சிறை வைப்பு அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படலாம்...

கண்மூடித்தனமானது  உள்நோக்கமின்றி ஆனால்  தாம் செய்யும் செயலானது தீங்கு விளைவிக்கும்.அல்லது மற்றவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்து செய்யக்கூடிய செயல். குற்ற கவனமின்மையானது கவனக் குறைவு அல்லது நியாமான எச்சரிக்கையுடன் நடக்காமலிருந்தது ஆகும்.
தன்பாற் கவனமின்மை இங்கு எதிர்வாதம் ஆகாது.

உதாரணம்.....

1. கூட்டம் நிறைந்த பகுதியில் வேகமாக வகனத்தை ஓட்டிச் சென்று  நடந்து சென்ற நபரை இடித்து மரணம் விளைவித்தல். கண்மூடித்தனமான செயலினால் மரணம் விளைவிப்பது ஆகும்..

2. தவறன பக்கத்தில் வாகனம் ஓட்டி பாதசாரியைக்கொன்று விடுவதானது கவனக்குறைவான செயலுக்கு உதாரணம்..
                                                     
                                                   அரசு சட்டகல்லூரி மாணவன்

முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                                                  http://dinamorusattam.blogspot.in
கருத்தை தெரிவிக்கவும்.....................

0 comments:

Post a Comment